Lord Surya Palan: பூத்துக்குலுங்க போகும் ராசிகள்.. சூரியன் வேட்டை ஆரம்பம்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya Palan: பூத்துக்குலுங்க போகும் ராசிகள்.. சூரியன் வேட்டை ஆரம்பம்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருது!

Lord Surya Palan: பூத்துக்குலுங்க போகும் ராசிகள்.. சூரியன் வேட்டை ஆரம்பம்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருது!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 20, 2024 02:43 PM IST

Lord Surya: சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவான் மிதுன ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பூத்துக்குலுங்க போகும் ராசிகள்.. சூரியன் வேட்டை ஆரம்பம்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருது!
பூத்துக்குலுங்க போகும் ராசிகள்.. சூரியன் வேட்டை ஆரம்பம்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருது!

இது போன்ற போட்டோக்கள்

சூரிய பகவான் சுக்கிர பகவான் என் ராசி ஆன ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார். மிதுன ராசிக்கு சூரிய பகவான் செல்கின்ற காரணத்தினால் சூரிய பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் அதிகமாக இருக்கும். 

சூரியன் மற்றும் புதன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவான் மிதுன ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க மற்றவர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும் உடனே மரியாதை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் பாக்கியம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சில முக்கியமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

நிதி நிலைமையில் உங்களுக்கு வலிமை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடத்திற்கு நீங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9