தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Luck: விரட்டி அடிக்கும் செவ்வாய்.. புரண்டு விழும் ராசிகள்.. வேதனை வருகிறது.. கண்ணீர் உறுதி

Bad Luck: விரட்டி அடிக்கும் செவ்வாய்.. புரண்டு விழும் ராசிகள்.. வேதனை வருகிறது.. கண்ணீர் உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 30, 2024 05:14 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது ருச்சிக யோகத்தை உருவாக்கியுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதிப்புகளை கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விரட்டி அடிக்கும் செவ்வாய்.. புரண்டு விழும் ராசிகள்.. வேதனை வருகிறது.. கண்ணீர் உறுதி
விரட்டி அடிக்கும் செவ்வாய்.. புரண்டு விழும் ராசிகள்.. வேதனை வருகிறது.. கண்ணீர் உறுதி

அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிகள் நுழைந்தார். இது அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். சிலருக்கு நல்ல பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது ருச்சிக யோகத்தை உருவாக்கியுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதிப்புகளை கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஓய்வெடுப்பதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும். 

தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூடுதல் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தேவையில்லாத இடத்தில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. பணவரவில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. கூடுதல் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளில் மூலம் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்காது. புதிய முயற்சிகள் எடுக்கும் முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. நண்பர்களோடு சற்று தள்ளி இருப்பது நல்லது.

மேஷ ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் 12-வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனிப்பட்ட கவனம் செலுத்தி உங்கள் உடலை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 

வியாபாரம் மந்தமாக இருக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் பொழுது உயர அலுவலர்களிடம் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு பெரிய முன்னேற்றத்தை கொடுக்காது. பயணங்கள் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9