தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி ஜூலை பண மழை.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணத்தில் விளையாடும் ராசிகள்..உங்க ராசி என்ன?

சனி ஜூலை பண மழை.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணத்தில் விளையாடும் ராசிகள்..உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 02:13 PM IST

Lord Sani: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி என்று கும்பராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்யப் போகிறார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

சனி ஜூலை பண மழை.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணத்தில் விளையாடும் ராசிகள்..உங்க ராசி என்ன?
சனி ஜூலை பண மழை.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணத்தில் விளையாடும் ராசிகள்..உங்க ராசி என்ன?

சனி பகவான் தற்போது கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவான் ஜூன் 30-ம் தேதி என்று கும்பராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்யப் போகிறார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காண்போம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிகத்தில் முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் உள்ள தேவைகள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் விரைவில் முடிவடையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். இந்த ஒப்பந்தங்கள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். ஜூலை மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9