தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Are Given Royal Life By Lord Mercury

புதன் சம்பவம் செய்ய தொடங்கினார்.. உதயத்தில் பணமழை.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. யோக ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 16, 2024 11:37 AM IST

Lord Mercury: அஸ்தமன பயணத்தில் இருந்த புதன் பகவான், மார்ச் 15ஆம் தேதியான நேற்று உதயமானார். புதன் பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் பகவான்
புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுவரை அஸ்தமன பயணத்தில் இருந்த புதன் பகவான், மார்ச் 15ஆம் தேதியான நேற்று உதயமானார். புதன் பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

புதன் பகவானின் உதயமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அதிகரிக்கும். புதிதாக வீடு வாங்கும் யோகம் உருவாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தடைப்பட்டு பிறந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு வாழ்வில் உயர்வை தரப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அனுகூலமான நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உங்களை தொந்தரவு செய்து வந்த நோய் குணமடையும். வெகு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வேலைகளில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிக்கி கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel