குரு அடக்கி வைக்கப் போகும் ராசிகள்.. தலை மேல் பணம் கொட்டுவது யாருக்கு?.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்!
Guru Bhagavan: 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Bhagavan: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான், செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ரிஷப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பின்னோக்கி பயணத்தை மேற்கொண்டார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கக்கூடும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வெற்றி பெறும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் பெரிய உயர்வு உங்களுக்கு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
நிறைய பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் எப்போதும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.