சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. நிற்காமல் போடுங்கள்.. இந்த ராசிகள் மீது அள்ளிக் கொட்டுவார்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. நிற்காமல் போடுங்கள்.. இந்த ராசிகள் மீது அள்ளிக் கொட்டுவார்..!

சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. நிற்காமல் போடுங்கள்.. இந்த ராசிகள் மீது அள்ளிக் கொட்டுவார்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Nov 02, 2024 02:58 PM IST

Lord Saturn: சனிபகவானின் வக்கிரன் நிவர்த்தியால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. நிற்காமல் போடுங்கள்.. இந்த ராசிகள் மீது அள்ளிக் கொட்டுவார்..!
சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. நிற்காமல் போடுங்கள்.. இந்த ராசிகள் மீது அள்ளிக் கொட்டுவார்..!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியை சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் இந்த நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். சனிபகவானின் வக்கிரன் நிவர்த்தியால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிபர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். எதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழில் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். 

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.