தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வருகிறது பணமழை.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது

குரு கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வருகிறது பணமழை.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 07, 2024 05:19 PM IST

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் சிறப்பான யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குரு பகவானின் அனைத்துவித செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் நட்சத்திரமாகும்.

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் சிறப்பான யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குருபகவான் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த காலத்தில் மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைவு.

கடக ராசி

 

உங்களுக்கு குரு நட்சத்திர இடமாற்றம் சிறப்பானதாக அமைந்துள்ளது. நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் சம்பந்தமான பயணங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel