சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. இந்த ராசிகளை விட மாட்டார்.. எப்போதும் ஆசிர்வாதம் இருக்கும்.. உங்க ராசி?
Sani bhagavan: கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் சனி பகவானுக்கு என பிடித்த ராசிகள் சிலர் உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான். கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். சனிபகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நன்மை மற்றும் தீமைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
அந்த வகையில் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் சனி பகவானுக்கு என பிடித்த ராசிகள் சிலர் உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசி
சனி பகவானின் அருள் எப்போதும் இருக்க கூடிய ராசிக்காரர்கள் நீங்களும் ஒருவர். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். எத்தனை கஷ்டம் ஏற்பட்டாலும் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் அதிக முக்கியத்துவம் எடுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஈடுபாடு உள்ள உங்களுக்கு சனி பகவானின் அன்பு எப்போதும் இருக்கும். அதனால் சனி பகவான் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்து கொண்டே இருப்பார். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சனி பகவான் உங்களை பார்த்து கொள்வார்.
துலாம் ராசி
ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு தெய்வத்தின் அனுகிரகத்தில் இருப்பார்கள். அந்த வகையில் சனி பகவானுக்கு மிகவும் விருப்பமான ராசிகளில் நீங்களும் ஒருவர் நீங்கள் சனி பகவானின் உச்ச ராசியாக கருதப்படுகிறீர்கள். எந்த சூழ்நிலை வந்தாலும் சனி பகவான் உங்களை விட்டுக் கொடுப்பது கிடையாது. அதிக கருணை மற்றும் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணாதிசயம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
மகர ராசி
சனிபகவானின் சொந்த ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு எத்தனை பாதகங்கள் ஏற்பட்டாலும் சனி பகவான் உங்களுக்கு துணையாக இருப்பார். சனி இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பெரிய சிக்கல்கள் எதுவும் தேடி வராது. சனி பகவான் உங்களுடைய ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருந்தால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதே சனி பகவானுக்கு பிடித்த செயலாக இருக்கின்ற காரணத்தினால் எப்போதும் அவருடைய அருள் ஆசி உங்களுக்கு இருக்கும்.
கும்ப ராசி
சனி பகவானின் சொந்தமான ராசிக்காரர்கள் நீங்கள். தற்போது உங்கள் ராசியில் அவர் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் சிறப்பு கவனம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எத்தனை பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனை எளிதில் கலந்து விடுவீர்கள் அதற்கு காரணம் சனி பகவான் தான். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் உங்களை ஏழ்மை நிலைக்கு கொண்டு செல்லாமல் சனி பகவான் பார்த்துக் கொள்வார். சனி பகவானின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9