தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: ரத்தக்கண்ணீர் விட வைக்கும் செவ்வாய்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சுற்றி வளைத்துவிட்டார்

Lord Mars: ரத்தக்கண்ணீர் விட வைக்கும் செவ்வாய்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சுற்றி வளைத்துவிட்டார்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 02:37 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரத்தக்கண்ணீர் விட வைக்கும் செவ்வாய்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சுற்றி வளைத்துவிட்டார்
ரத்தக்கண்ணீர் விட வைக்கும் செவ்வாய்.. தலை தெறிக்க ஓடும் ராசிகள்.. சுற்றி வளைத்துவிட்டார்

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். இதனால் மகா தரித்திர யோகம் உருவாக்கியுள்ளது. செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பு முன்னேற்றத்தை பெறுவதற்கு சற்று காலதாமதமாகும். நிதி ரீதியாக உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் தரித்திர யோகம் செவ்வாய் பகவானால் உருவாக்கி உள்ளது. இதனால் உங்களுக்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அதிகமாக வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்திற்கு ஏற்ற காலமாக இருக்காது. புதிய முதலீடுகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு கொஞ்சம் போராட்டமாக இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் சிக்கல்களை கொடுப்பதில் எந்த குறையும் இருக்காது. இது உங்களுக்கு போராட்ட காலமாக இருக்கும் எடுக்கும். வேலைகள் அனைத்தும் முடிவடைவதற்கு சட்ட தாமதமாகவும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

மற்றவர்களிடத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையில்லாத கோபத்தை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி ராசி

தரித்திர யோகம் உங்களை சுற்றி சுற்றி அடிக்க போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தாலும் அதே அளவிற்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக கவனம் செலுத்தி நீங்கள் பயணிக்க வேண்டும். 

இல்லை என்றால் சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel