தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Rule: பணத்தின் புரளப் போகும்.. அதிர்ஷ்டத்தை தரும் செவ்வாய்.. நீங்க என்ன ராசி.. வாங்க பாக்கலாம்!

Mars Rule: பணத்தின் புரளப் போகும்.. அதிர்ஷ்டத்தை தரும் செவ்வாய்.. நீங்க என்ன ராசி.. வாங்க பாக்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 01:01 PM IST

Mars Rule: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். ஒரு வருடத்திற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் சென்றுள்ளார். இது இவருடைய சொந்தமான ராசியாகும்.

பணத்தின் புரளப் போகும்.. அதிர்ஷ்டத்தை தரும் செவ்வாய்.. நீங்க என்ன ராசி.. வாங்க பாக்கலாம்!
பணத்தின் புரளப் போகும்.. அதிர்ஷ்டத்தை தரும் செவ்வாய்.. நீங்க என்ன ராசி.. வாங்க பாக்கலாம்!

செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். ஒரு வருடத்திற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் சென்றுள்ளார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவாலான வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

மிகவும் அற்புதமான பலன்கள் உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களை தேடி வருகிறது.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel