தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிறப்பிலேயே இந்த ராசி பெண்களுக்கு ஆண் நண்பர்கள் அதிகமாம்.. இதில் உங்க ராசி இருக்கா.. வாங்க பார்க்கலாம்

பிறப்பிலேயே இந்த ராசி பெண்களுக்கு ஆண் நண்பர்கள் அதிகமாம்.. இதில் உங்க ராசி இருக்கா.. வாங்க பார்க்கலாம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2024 11:33 AM IST

Friendship: ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து பழகினால் தவறாக பேசும் அளவிற்கு காலம் இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் ஆண்களுடன் ஆழமான நட்போடு பழகுவார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆண் நண்பர்கள்
ஆண் நண்பர்கள்

12 ராசிகளுக்கு கீழ் பிறந்தவர்கள் எப்போதும் தனித்துவமான குணாதிசயத்தோடு இருப்பார்கள். அனைவரும் தனி குணாதிசயத்தோடு இருந்தாலும் அவர்களுக்கு என அதிபதியாக கிரகங்கள் இருக்கும். அந்த கிரகத்தின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் சிறப்பான குணாதிசயத்தை பெற்று இருப்பார்கள்.

மனித உறவில் நட்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக ஆண் மற்றும் பெண் நட்பு ஊக்குவிக்கப்பட வேண்டிய சிறந்த அம்சமாகும். ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து பழகினால் தவறாக பேசும் அளவிற்கு காலம் இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் ஆண்களுடன் ஆழமான நட்போடு பழகுவார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

நீங்கள் பிறப்பிலேயே வெளிப்படையான குணாதிசயம் கொண்டவர்கள் மற்றவர்களுடன் நட்போடு பழகுவதை அதிகம் விரும்புவீர்கள். பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களுடன் நெருங்கி பழகுவதை நீங்கள் விரும்புவீர்கள். உங்களுடைய பழக்கம் மற்றவர்கள் மத்தியில் தவறாக பேசப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உங்களுடைய நட்போடு தொடர்ந்து பயணம் செய்வீர்கள். உங்களுடைய தூய்மையான நட்பு எந்த கருத்துக்கள் வந்தாலும் மாறாது.

சிம்ம ராசி

 

இயற்கையாகவே ஆளுமை திறன் மற்றும் அன்பு பரிமாற்றம் செய்யக்கூடிய குணாதிசயத்தை கொண்டவர்கள் நீங்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். மற்றவர்களை சிரமம் என்று தங்கள் பக்கம் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். மற்றவர்களின் கவனத்தை தன் மீது வைப்பதற்கு அனைத்து விதமான காரியங்களையும் செய்யக்கூடியவர்கள். நீங்கள் உங்களுடைய நட்பு வட்டாரம் எப்போதும் பெரிதாக இருக்கும். குறிப்பாக ஆண் தோழர்கள் அதிகம் இருப்பார்கள். வெளி உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் தனது நட்பை தூய்மையாக வைத்துக் கொள்ள விரும்புவீர்கள்.

துலாம் ராசி

 

பிறப்பிலேயே வசீகரத் தன்மை கொண்டவர்கள் நீங்கள். தனக்கான அடையாளத்தை உருவாக்குவதில் நீங்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பீர்கள். தனது சுயத்தை எப்போதும் விட்டுக் கொடுக்காத ராசிக்காரர்கள் நீங்கள். ஆனால் மற்றவர்கள் மீது கருணை செலுத்துவதில் உங்களுக்கு மிக நீங்கள் மட்டும் தான். இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்களது உறவுகளின் மீது ஆழமான நம்பிக்கை வைத்து பயணம் செய்யக் கூடியவர்கள். இதனால் உங்களுக்கு நட்பு வட்டாரம் பெரிதாக இருக்கும். அதே சமயம் ஆண் நண்பர்களுடன் தூய்மையான நட்பை வெளிப்படுத்துவீர்கள். எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு இந்த நட்பை சரியான முறையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள்.

தனுசு ராசி

 

புதிய அனுபவங்களை எப்போதும் விரும்பக்கூடிய ராசிகளில் நீங்களும் முருகர் உற்சாகத்தோடு வாழக்கூடிய நீங்கள். நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் அனைவருடமும் மிகவும் இயல்பாக பழகக் கூடியவர்கள். நட்பு பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான். ஒருவரிடம் ஆழமாக சென்று அவர்களுடன் சேர்ந்து பயணிக்க கூடிய திறன் கொண்டவர்கள். பெண் நண்பர்கள் மட்டும் இல்லாமல் ஆண் நண்பர்களுடன் ஆழமாக பழகி தூய்மையான நட்போடு பயணம் செய்யக் கூடியவர்கள் நீங்கள். உங்களின் அடையாளத்தை நீங்கள் எப்போதும் விட்டுக் கொடுப்பது கிடையாது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel