KETU LUCK: நிழல் கிரகத்தில் சிக்கிய ராசிகள்.. சுக்கிரன் கொட்டும் பணம்.. யோகம் ஓடி வருகிறது..
Venus and Ketu: கேது மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து பயணம் செய்வது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசி பயணம் ஆனது சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
KETU LUCK: நவக்கிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ஒரு சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார்.
ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல் ஒரே மாதிரி இருக்கும் கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிர பகவான் இவர் ஆடம்பரம், சொகுசு, காதல், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கன்னி ராசியில் நுழைகின்றார்.
கன்னி ராசியில் ஏற்கனவே பயணம் செய்து வரும் கேது பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். கேது மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து பயணம் செய்வது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசி பயணம் ஆனது சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
கடக ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்க நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு குறையும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்க நிகழ்கின்றது. இதனால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக அமையும். பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தனித்துவமான ஆளுமை திறன் அதிகரிக்கும். கலை மற்றும் இசையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் கேது சேர்ந்து பயணம் செய்யப்போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பான நேரமாக அமையும். தொழில் நல்ல முன்னேற்றங்களுக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9