Lord Guru: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. குரு கொடுக்கப் போகிறார்.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. குரு கொடுக்கப் போகிறார்.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்..!

Lord Guru: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. குரு கொடுக்கப் போகிறார்.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 19, 2024 01:07 PM IST

Lord Guru: குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். அதற்கு பிறகு பிப்ரவரி நான்காம் தேதி அன்று தனது முன்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர்.

கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. குரு கொடுக்கப் போகிறார்.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்..!
கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. குரு கொடுக்கப் போகிறார்.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்..!

இது போன்ற போட்டோக்கள்

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்கின்றார். அதற்கு பிறகு பிப்ரவரி நான்காம் தேதி அன்று தனது முன்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது பணவரவிழிந்த குறையும் இருக்காது. உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும். குரு பகவானின் தாக்கம் உங்களுக்கு புதிய வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். 

வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். செலவுகள் குறையக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கடக ராசி

உங்கள் ராசியில் குரு பகவானின் பின்னோக்கிய பயனும் 11வது வீட்டில் நிகழ உள்ளது இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

தனுசு ராசி

குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நிகழவு உள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். இதுவரை உங்களது கைக்கு வராமல் இருந்த பணம் அனைத்தும் உங்களைத் தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். நண்பர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9