Ketu Luck: கெட்ட பையன் சார் இந்த கேது.. இந்த ராசிகள் பொழச்சுக்குவாங்க சார்.. வேற லெவல் ஆகப்போவது யார்?-here we will see about the zodiac signs in which money will be showered by lord ketu luck - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu Luck: கெட்ட பையன் சார் இந்த கேது.. இந்த ராசிகள் பொழச்சுக்குவாங்க சார்.. வேற லெவல் ஆகப்போவது யார்?

Ketu Luck: கெட்ட பையன் சார் இந்த கேது.. இந்த ராசிகள் பொழச்சுக்குவாங்க சார்.. வேற லெவல் ஆகப்போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 25, 2024 05:34 PM IST

Ketu Luck: கேது பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கேது பகவானின் கன்னி ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

Ketu Luck: கெட்ட பையன் சார் இந்த கேது.. இந்த ராசிகள் பொழச்சுக்குவாங்க சார்.. வேற லெவல் ஆகப்போவது யார்?
Ketu Luck: கெட்ட பையன் சார் இந்த கேது.. இந்த ராசிகள் பொழச்சுக்குவாங்க சார்.. வேற லெவல் ஆகப்போவது யார்?

அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசிகள் நுழைந்தார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கேது பகவானின் கன்னி ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

மேஷ ராசி

கேது பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுத்து வருகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் சிறப்பான முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் நண்பர்களால் உதவி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்க கூடும். பெரிய அளவில் எடுத்துக் கொண்ட வாய்ப்புகள் அனைத்தும் வெற்றி அடையும். குறிப்பிடத்தக்க தொழில் ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் முழு பலன்களையும் பெற்று தரும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் அனைத்தும் அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும் ஞானம் மற்றும் அறிவு அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

புதிய முதலீடுகள் அதிக லாபத்தை பெற்று தரும். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தினாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பல வெகுமதிகள் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்