தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் சுக்கிரன்.. மகிழ்ச்சி தேடிவரும் ராசிகள்

Lord Venus: திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் சுக்கிரன்.. மகிழ்ச்சி தேடிவரும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2024 10:44 AM IST

Lord Venus: சுக்கிரனின் மிதுன ராசி பயணம் ஆனது சில ராசிகளின் காதல் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் சுக்கிரன்.. மகிழ்ச்சி தேடிவரும் ராசிகள்
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் சுக்கிரன்.. மகிழ்ச்சி தேடிவரும் ராசிகள்

Lord Venus: நவகிரகங்களின் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்திருக்கின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்திற்கு ஏற்படுத்தும்.

காதல் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். சுக்கிர பகவான் ராசி மாற்றத்தின் பொழுது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும். அந்த வகையில் சுக்கிரனின் மிதுன ராசி பயணம் ஆனது சில ராசிகளின் காதல் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

வாழ்க்கை துணையின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு மற்றும் பாசம் அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டது சிக்கல்கள் அனைத்தும் குறையும். மொத்தத்தில் உங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிர பகவான் இதனால் உங்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் சிறந்த பங்களிப்பால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

ஒருவருக்கொருவர் ஆழமாக புரிந்து கொண்டு பயணம் செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறைந்து திருமணம் வரைக்கும் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

துலாம் ராசி

திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலைகளில் உருவாகும் அதனால் உங்களுக்கு உறவு பலமாகும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கணவன் மனைவி இடையே குறையும். 

எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி அடையும். மனைவியால் நீங்கள் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையால் சில பெண்கள் உச்சத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியில் சுக்கிரன் அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

சிம்ம ராசி

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பணவரவு இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழுதாக உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது. 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மனைவி உங்களுக்கு ஒரு வரமாக கிடைப்பார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைந்து திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களோடு கஷ்டங்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9