தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி சங்கடங்கள் தீர்ப்பார்.. பண குவியலில் பாயும் ராசிகள்.. சிறப்பான வாழ்க்கை உங்களுக்குத்தான்

Lord Sani: சனி சங்கடங்கள் தீர்ப்பார்.. பண குவியலில் பாயும் ராசிகள்.. சிறப்பான வாழ்க்கை உங்களுக்குத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 01:10 PM IST

Lord Sani: ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனி பகவான் மேற்கொள்ள உள்ளார் தொடர்ந்து 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது.

சனி சங்கடங்கள் தீர்ப்பார்.. பண குவியலில் பாயும் ராசிகள்.. சிறப்பான வாழ்க்கை உங்களுக்குத்தான்
சனி சங்கடங்கள் தீர்ப்பார்.. பண குவியலில் பாயும் ராசிகள்.. சிறப்பான வாழ்க்கை உங்களுக்குத்தான்

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனி பகவான் மேற்கொள்ள உள்ளார் தொடர்ந்து 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

சனி பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களை பெற்று தரும். சனி பகவானின் அருளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். 

பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும். நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். ஜூன் மாதம் முடிவிலிருந்து உங்களுக்கு நல்ல யோகம் தொடங்க போகிறது. புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை வாக்கியம் கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9