தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  December Attack: ராகு டிசம்பர் வரை விடமாட்டார்.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. அடி விழுவது உறுதியானது

December Attack: ராகு டிசம்பர் வரை விடமாட்டார்.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. அடி விழுவது உறுதியானது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 03:26 PM IST

December Attack: ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது ராகு பகவானின் பயணத்தால் ஒரு சில ராசிகள் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராகு டிசம்பர் வரை விடமாட்டார்.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. அடி விழுவது உறுதியானது
ராகு டிசம்பர் வரை விடமாட்டார்.. சிக்கி சிதைய போகும் ராசிகள்.. அடி விழுவது உறுதியானது

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது ராகு பகவானின் பயணத்தால் ஒரு சில ராசிகள் டிசம்பர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் சங்கடமாக இருக்கக்கூடும். மனக்கசப்புகள் மற்றவர்களிடம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

உங்களுடைய வாயால் சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. யோசித்து சிந்தித்து வார்த்தைகளை வெளியே விட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால் தான் நீங்கள் பலமாக இருக்க முடியும். தேவையில்லாமல் மற்றவர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் பல்வேறு விதமான இழப்புகளை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிறைய பண சிக்கல்களை நீங்கள் சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளது புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தராது. தொழில் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தேவையில்லாமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு பண இழப்புகளை ஏற்படுத்தும். உறவினர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel