தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: கொட்டும் பணமழை.. புதன் தரும் உச்சயோகம்.. இந்த ராசிகளை இனி கையில் பிடிக்க முடியாது!

Money Luck: கொட்டும் பணமழை.. புதன் தரும் உச்சயோகம்.. இந்த ராசிகளை இனி கையில் பிடிக்க முடியாது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 01:53 PM IST

Money Luck: புதன் பகவானின் பயணம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கொட்டும் பணமழை.. புதன் தரும் உச்சயோகம்.. இந்த ராசிகளை இனி கையில் பிடிக்க முடியாது!
கொட்டும் பணமழை.. புதன் தரும் உச்சயோகம்.. இந்த ராசிகளை இனி கையில் பிடிக்க முடியாது!

புதன் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு புதன் பகவானின் பயணம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த கூடும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது விதத்தில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள். தேடி வரும் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிலும் கிடைக்கும். 

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது பேட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். புதன் பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9