தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நாளை முதல் பிரித்து மேயும் செவ்வாய்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. எல்லாம் கிடைக்கும்.. அதிர்ஷ்டம் வரும்

நாளை முதல் பிரித்து மேயும் செவ்வாய்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. எல்லாம் கிடைக்கும்.. அதிர்ஷ்டம் வரும்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2024 11:00 AM IST

Lord Mars: செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

நாளை முதல் பிரித்து மேயும் செவ்வாய்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. எல்லாம் கிடைக்கும்.. அதிர்ஷ்டம் வரும்
நாளை முதல் பிரித்து மேயும் செவ்வாய்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. எல்லாம் கிடைக்கும்.. அதிர்ஷ்டம் வரும்

Lord Mars: நவகிரகங்களில் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை 12ஆம் தேதி அதாவது நாளை செவ்வாய் பகவான் சுக்கிரனின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

ரிஷப ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கூட்டு வியாபாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிக்கி கிடந்த பணம் உங்களிடம் இருந்து சேரும். உன்னிடம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு குறையும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் அமையும். மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். 

பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். முக்கியமான விஷயங்களுக்கு எடுக்கப்படும் முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். பேச்சுத் திறமையால் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய திறமை உங்களுக்கு உள்ளது. உங்களுக்கு அனைத்து காரியங்களும் ஏற்றவாறு நடக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9