Lord Mars: தரித்திரத்தில் கண்ணீர் விடும் ராசிகள்.. செவ்வாய் அடி கொடுப்பார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: தரித்திரத்தில் கண்ணீர் விடும் ராசிகள்.. செவ்வாய் அடி கொடுப்பார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர்?

Lord Mars: தரித்திரத்தில் கண்ணீர் விடும் ராசிகள்.. செவ்வாய் அடி கொடுப்பார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 13, 2024 01:45 PM IST

Lord Mars: ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் மகா தரித்திர யோகம் உருவாக்கியது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாக்கிய மகா தரித்திர யோகத்தால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர்.

தரித்திரத்தில் கண்ணீர் விடும் ராசிகள்.. செவ்வாய் அடி கொடுப்பார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர்?
தரித்திரத்தில் கண்ணீர் விடும் ராசிகள்.. செவ்வாய் அடி கொடுப்பார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர்?

இது போன்ற போட்டோக்கள்

செவ்வாய் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் மகா தரித்திர யோகம் உருவாக்கியது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாக்கிய மகா தரித்திர யோகத்தால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நிறைய செலவுகள் உங்களைத் தேடி வரக்கூடிய உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத உறவுகளோடு எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

உங்களுக்கு தரித்திரம் யோகம் பல்வேறு விதமான தீங்கை விளைவிக்க கூடும். சிறுவேலையாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று கால தாமதமாகும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.  சக ஊழியர்களோடு மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எந்த விதமான முடிவுகளையும் எடுப்பது நல்லது கிடையாது. புதிய முதலீடுகளை மற்றவர்களிடம் ஆலோசனை செய்து செய்வது நல்லது. மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு சிரமமாக இருக்கக்கூடும்.

கடக ராசி

தரித்திர யோகத்தில் விரட்டி விரட்டி கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர். எந்த வேலையை தொடங்கினாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்துக் கொண்ட வேலைகளில் கடின உழைப்பு கொடுக்க வேண்டி வரும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மிகப்பெரிய நஷ்டத்தை நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  உறவினர்களால் உங்களுக்கு மனக்கசப்பு ஏற்படும். தேவையில்லாமல் போபடுவதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாக இது உங்களுக்கு அமையும். நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9