GURU LUCK: குரு தலையில் அமரப் போகிறார்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. விளையாட்டு இனிமேல் சொர்க்கத்தில் தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Luck: குரு தலையில் அமரப் போகிறார்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. விளையாட்டு இனிமேல் சொர்க்கத்தில் தான்

GURU LUCK: குரு தலையில் அமரப் போகிறார்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. விளையாட்டு இனிமேல் சொர்க்கத்தில் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 23, 2024 05:35 PM IST

GURU LUCK: குருபகவான் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

GURU LUCK: குரு தலையில் அமரப் போகிறார்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. விளையாட்டு இனிமேல் சொர்க்கத்தில் தான்
GURU LUCK: குரு தலையில் அமரப் போகிறார்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. விளையாட்டு இனிமேல் சொர்க்கத்தில் தான்

இது போன்ற போட்டோக்கள்

GURU LUCK: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மே மாதத்தில் இருந்து அடுத்த ஓராண்டிற்கு இதே ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வழக்கத்தை விட வாழ்த்து துணையின் முழு ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

கடக ராசி

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் செயல் திறன் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

விருச்சிக ராசி

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பழைய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்