தீபாவளி அன்று சம்பவம்.. கௌரி யோகம் தரும் சந்திரன்.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தீபாவளி அன்று சம்பவம்.. கௌரி யோகம் தரும் சந்திரன்.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க!

தீபாவளி அன்று சம்பவம்.. கௌரி யோகம் தரும் சந்திரன்.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 23, 2024 10:54 AM IST

Chandra Bhagavan: சந்திர பகவான் ரிஷப ராசி மாற்றத்தால் உருவாகும் கௌரி யோகத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தீபாவளி அன்று சம்பவம்.. கௌரி யோகம் தரும் சந்திரன்.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க!
தீபாவளி அன்று சம்பவம்.. கௌரி யோகம் தரும் சந்திரன்.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க!

இது போன்ற போட்டோக்கள்

அப்படிப்பட்ட உடல் பலத்திற்கு மனபலம் மிகவும் அவசியமாகும். அதற்கு சந்திர பகவான் மிகவும் பலமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நமது உலக வாழ்வுக்கு உடற்பலம் என்பது மிகப்பெரிய முக்கியமான ஒன்றாகும். அந்த உடல் பலத்தையும் மன பலத்தையும் கொடுக்கக் கூடியவர் சந்திர பகவான்.

நவகிரகங்களில் சந்திர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சந்திர பகவான் தீபாவளியின் போது ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் கௌரி யோகம் உருவாகியுள்ளது. சந்திர பகவான்  ரிஷப ராசி மாற்றத்தால் உருவாகும் கௌரி யோகத்தின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் சந்திர பகவானின் சஞ்சாரம் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. கௌரியோக பலன்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால சுமைகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காதல் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடக ராசி

சந்திர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சரியான நேரத்தில் நடக்க உள்ளது. சரியான முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புத்திசாலித்தனமான முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள் உதவியாக இருப்பார்கள். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு மற்றும் முன்னேற்றம் கிடைக்கக்கூடும்

சிம்ம ராசி

சந்திர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு கௌரி யோகத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்று தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். 

புதிய முயற்சிகளால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.