30 வருடங்களுக்குப் பிறகு சனி பிடித்த ராசிகள்.. ஏழரையில் கொட்டும் கோடிகள்.. இனி சூப்பரோ சூப்பர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  30 வருடங்களுக்குப் பிறகு சனி பிடித்த ராசிகள்.. ஏழரையில் கொட்டும் கோடிகள்.. இனி சூப்பரோ சூப்பர்

30 வருடங்களுக்குப் பிறகு சனி பிடித்த ராசிகள்.. ஏழரையில் கொட்டும் கோடிகள்.. இனி சூப்பரோ சூப்பர்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 08, 2024 05:09 PM IST

Lord Saturn: சனி பகவான் இந்த நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதுவரை வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் வக்கிர நிவர்த்தியால் சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

30 வருடங்களுக்குப் பிறகு சனி பிடித்த ராசிகள்.. ஏழரையில் கொட்டும் கோடிகள்.. இனி சூப்பரோ சூப்பர்
30 வருடங்களுக்குப் பிறகு சனி பிடித்த ராசிகள்.. ஏழரையில் கொட்டும் கோடிகள்.. இனி சூப்பரோ சூப்பர்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விலகி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசி இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் இந்த நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதுவரை வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் வக்கிர நிவர்த்தியால் சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner