கேது சாது கிடையாது.. புரட்டி விரட்டி எடுக்கும் ராசிகள்.. 2025 தலைகீழாக விழுகிறது யோகம்.. அழகான குடும்பம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கேது சாது கிடையாது.. புரட்டி விரட்டி எடுக்கும் ராசிகள்.. 2025 தலைகீழாக விழுகிறது யோகம்.. அழகான குடும்பம்!

கேது சாது கிடையாது.. புரட்டி விரட்டி எடுக்கும் ராசிகள்.. 2025 தலைகீழாக விழுகிறது யோகம்.. அழகான குடும்பம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 06, 2024 04:53 PM IST

Lord Ketu: கேது பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயமா அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கேது சாது கிடையாது.. புரட்டி விரட்டி எடுக்கும் ராசிகள்.. 2025 தலைகீழாக விழுகிறது யோகம்.. அழகான குடும்பம்!
கேது சாது கிடையாது.. புரட்டி விரட்டி எடுக்கும் ராசிகள்.. 2025 தலைகீழாக விழுகிறது யோகம்.. அழகான குடும்பம்!

இது போன்ற போட்டோக்கள்

கேது மற்றும் ராகு இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு கேது பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் கேது பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயமா அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

கேது பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

வேலையில்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கேது பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்தோஷங்கள் தேடிவரும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

துலாம் ராசி

கேது பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான சந்தோஷங்களும் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் முழு கவனத்தோடு செயல்பட்டால் வெற்றி அடையும். அனைத்திலும் உங்களுக்கு விரும்பிய பலன்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு சற்று சிக்கலாக இருக்கும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.