Lord Siva Rasis: சிவன் இதயத்தில் அமர்ந்த ராசிகள்.. தொட்டா தீப்பொறி பறக்கும்.. உங்களை யாராலும் டச் பண்ண முடியாது
Lord Siva: ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கின்படி சிவபெருமானின் அருளை பெறுவதற்காகவே சில ராசிகள் உள்ளன. அவர்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தராசிகளாக திகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இங்கு காண்போம்

Lord Siva: கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்ற ஆதி கடவுளாக விளங்கக்கூடிய இவர் முதல் முடிவுமாக திகழ்ந்து வருகின்றார் மும்மூர்த்திகளில் சிவபெருமான் பிறப்பு மற்றும் இறப்பு இல்லாத இறைவனாக விளங்கி வருகின்றார் அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும் கடவுளாக விளங்கி வருகின்றார்.
சிவபெருமான் உலகம் முழுவதும் பல்வேறு விதமான வடிவங்களில் காட்சி கொடுத்து வருகிறார் குறிப்பாக இந்தியாவில் லிங்கத் திருமேனியில் காட்சிப்படுத்து வருகிறார். திரும்பும் திசை எல்லாம் இந்தியாவில் சிவபெருமானுக்கு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி தடம் பதிக்கும் இடமெல்லாம் சிவபெருமானின் கோயில்கள் இருக்கின்றன. சில கோயில்களின் பிறப்பே தெரியாத அளவிற்கு மிகப்பெரிய கட்டுமானங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிவபெருமானை வழிபடுவதற்கு என சிறப்பு நாள் கிழமைகள் கிடையாது. நினைத்த நேரத்தில் வழிபடக்கூடிய இறைவனாக எளிமை நாயகனாக திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார்.
இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கின்படி சிவபெருமானின் அருளை பெறுவதற்காகவே சில ராசிகள் உள்ளன. அவர்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தராசிகளாக திகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
கும்ப ராசி
சனிபகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள் சனி பகவான் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர் ஆவார் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரு சில பக்தர்களின் சனி பகவானும் ஒருவர் அதன் காரணமாகவே இவர் சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சனி பகவானின் சொந்தமான ராசியாக விளங்கிவரும் உங்கள் மீது சிவபெருமானின் அருள் ஆசி எப்போதும் இருக்கும்.
வாழ்வில் அனைத்து செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இன்னல்கள் அனைத்தும் சிவபெருமானின் ஆசியால் தவிடு பொடியாகும். பஞ்சாக்ஷர மந்திரத்தை இரவு முழுவதும் கூறினால் உங்களுக்கு சிவபெருமானால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும் அவருக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள் சிவபெருமானின் விசேஷ அருள் பெற்ற ராசிகளின் நீங்களும் ஒருவர் ஏனென்றால் செவ்வாய் பகவான் சிவபெருமானின் ருத்ரத்தில் பிறந்த காரணத்தினால் உங்கள் மீது அவருக்கு எப்போதும் அதீத பாசம் உண்டு சிவபெருமானின் பிள்ளையாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார்.
அவருடைய ருத்ரத்தில் பிறந்த காரணத்தினால் செவ்வாய் பகவான் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருப்பார். அதன் காரணமாக சிவபெருமானின் அருள் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு. உங்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை சிவபெருமான் பார்த்துக் கொள்வார். அவருக்கு பிடித்த ராசிகளில் நீங்கள் உள்ளது மிகப்பெரிய விசேஷமாகும்.
மகர ராசி
சனி பகவானின் முக்கிய சொந்தமான ராசியில் நீங்களும் ஒருவர். சிவபெருமானின் தீவிர பக்தராக விளங்கக்கூடிய சனி பகவானின் ராசியாக நீங்கள் விளங்கி வருகின்ற காரணத்தினால் சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அது விரைவில் உங்களை விட்டு விலகிவிடும். ஏனென்றால் சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். அதனால் உங்களுக்கு பிரச்சனை எதுவும் வராது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
