தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs Blessed By Guru Bhagavan

Guru: குருவின் தக் லைஃப்.. ஆடம்பர ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 12:23 PM IST

குருபகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 31ஆம் தேதியில் இருந்து குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதியன்று குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குருபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் மற்றும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க போகின்றார். இதுவரை எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் பணவரவு எந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

குரு பகவான் மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதையை அதிகப்படுத்துவார். நீங்கள் சொல்லும் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடம் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

கடக ராசி

 

குருவின் ஆட்டம் உங்கள் ராசியில் சுகமாக முடியப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பண வரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு முயற்சிகள் உங்களுக்கு சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.