Sukra 2024: 20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra 2024: 20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்

Sukra 2024: 20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 13, 2024 10:53 AM IST

Sukra 2024: ஜூலை 31ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சிம்ம ராசிக்கு செல்கிறார். சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்
20 நாட்கள் கண்ணீர் விடப் போகும் ராசிகள்..சுக்கிரன் பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம்.. இதெல்லாம் வரும்

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிர பகவான் ஜூலை ஏழாம் தேதி அன்று மிதுன ராசியிலிருந்து சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசியில் நுழைந்தார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சிம்ம ராசிக்கு செல்கிறார். சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் இதனால் நீங்கள் மன உளைச்சலை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே பேசும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலை தற்போது ஏற்படாது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிக ராசி

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரம் சிறப்பாக இருக்காது. 

தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் சிறிய வேலைகள் முடிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இலக்குகளை நீங்கள் அடைவதற்கு சற்று சிரமமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கை இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். 

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடங்கல்கள் ஏற்படக்கூடும். தொழிலில் மந்தமான சூழ்நிலையில் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9