தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs Afflicted By Lord Mercury

Mercury: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 12:58 PM IST

Mercury: புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் புதன் பகவான் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தனுசு ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார்.

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் சில ராசிகள் புதன் பகவானின் இடமாற்றத்தால் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக மதிப்புமிக்க பொருட்கள் மீது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல இடமாற்றம் கொடுக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது வியாபாரத்தில் சற்று சறுக்கல்கள் ஏற்படும். பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கின்ற காரணத்தினால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் நுழைந்துள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்கள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நினைத்த காரியத்தை நிறைவேற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் சங்கடங்கள் ஏற்பட்டால் அமைதியாக இருப்பது நல்லது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.