Money Luck: கழுத்தில் கத்தி வைத்த செவ்வாய்.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: கழுத்தில் கத்தி வைத்த செவ்வாய்.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி

Money Luck: கழுத்தில் கத்தி வைத்த செவ்வாய்.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 15, 2024 02:02 PM IST

Lord Mars: அசுப யோகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. செவ்வாய் பகவானின் தரித்திர யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக உள்ளது. இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கழுத்தில் கத்தி வைத்த செவ்வாய்.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி
கழுத்தில் கத்தி வைத்த செவ்வாய்.. தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி

இது போன்ற போட்டோக்கள்

இவர் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் அங்காரகம் யோகம் விலகி தரித்திர யோகம் உருவாகியது.

இது அசுப யோகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. செவ்வாய் பகவானின் தரித்திர யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக உள்ளது. இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவானின் தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

தரித்திர யோகத்தால் உங்களுக்கு சிக்கல்கள் வரப்போகின்றது நீங்கள் மிகவும் அதிகமாக உழைக்க வேண்டும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். எடுத்துக்கொண்ட காரியங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடும். பண நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பிறந்தவர்களால் தொந்தரவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி

உங்கள் ராசியில் தரித்திர யோகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. மோசமான பலன்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை எடுத்தாலும் அதில் தடைகள் கட்டாயம் இருக்கும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்பட உள்ளது. தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணையால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது செலவுகள் அதிகரிக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9