தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs Affected By The Transit Of Lord Surya

ஜாக்கிரதை.. சூரியன் மீனத்தில் புகுந்தார்.. புரட்டி அடிக்க போகும் வாழ்க்கை.. எச்சரிக்கை ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2024 01:56 PM IST

Lord Surya: சூரிய பகவான் ஆன்மா, உயிர், பதவி, கண்ணியம், மரியாதை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நன்மைகளைக் கொடுக்கும். அதே சமயம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ராகு பகவான் அந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சூரிய பகவானும் அவருடைய இணைந்துள்ளார். நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் ஆன்மா, உயிர், பதவி, கண்ணியம், மரியாதை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நன்மைகளைக் கொடுக்கும். அதே சமயம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும். அந்த வகையில் சூரிய பகவானின் மீன ராசி சஞ்சாரம் அல்லது சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக இல்லை அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. வணிகம் மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய திட்டத்தை அமல்படுத்த சற்று காலம் எடுத்துக் கொள்வது நல்லது. பங்குதாரர்களோடு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் பொறுமையாக இருந்தால் முன்னேற்றத்தை அடையலாம். கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரம் அணுகூலமாக இருக்காது. பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. அதிக வருமானத்தை எதிர்பார்த்து காத்திருப்பது நல்லது கிடையாது. புதிய முதலீடுகளால் உங்களுக்கு பல நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய திட்டங்களை யாரிடமும் முன்கூட்டியே சொல்லாதீர்கள் அது சிக்கலை ஏற்படுத்தும்.

தனுசு ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. கலவையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இல்லற வாழ்க்கையில் பல்வேறு விதமான சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel