தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணக்கஷ்டம் வருகிறது.. நேர்கோட்டில் மீனத்தில் புதன்.. படாதபாடு பட போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

பணக்கஷ்டம் வருகிறது.. நேர்கோட்டில் மீனத்தில் புதன்.. படாதபாடு பட போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 05:16 PM IST

Mercury: இந்த ஏப்ரல் மாதத்தில் புதன் பகவான் மீன ராசி வழியாக நேரடி கோட்டில் நகரத் தொடங்கியுள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில சிக்கல்களை கொடுக்கப் போகின்றது.

புதன்
புதன்

புதன் பகவான் கல்வி அறிவு வியாபாரம் நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குறைந்த காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் புதன் பகவான். கிரகங்களின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதத்தில் புதன் பகவான் மீன ராசி வழியாக நேரடி கோட்டில் நகரத் தொடங்கியுள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சில சிக்கல்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் நேரடியான பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான துன்பங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பல முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அமையும். அதனால் நீங்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய தருணமாக அமைந்துள்ளது.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் மற்றும் ஆறாவது வீட்டில் புதன் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் ஒன்பதாம் வீட்டில் நேரடி கோட்டில் நகர்ந்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பயணம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடம்பில் மீது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. இல்லை என்றால் பணத்தை இலக்க நேரிடும். பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் தோல்வியடைய கூடும். கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிம்ம ராசி

 

புதன் நேரடி பயணத்தில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் பணம் சம்பாதிக்கும் திறன் ஆனது உங்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும். வருமானம் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். தீவிரமான அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடுமையாக நீங்கள் உழைத்தாலும் உங்களுக்கு பெரிய பலன்கள் எதுவும் கிடைக்காத சூழ்நிலை அமையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel