தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Sign People Who Get Pana Yoga From Guru Bhagavan

Guru Peyarchi Palan: குரு வந்துவிட்டார்.. திருமண யோகத்தை தரப் போகிறார்.. பணத்தை கொட்டப் போகிறார்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 16, 2024 01:49 PM IST

Guru Bhagavan: இந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றத்தால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குருபகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel