தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Sign People Who Are Going To Suffer From Saturn

Sani Attack: சனி உதயத்தால் சிரமப்பட போகும் ராசிகள்.. தப்பிப்பது மிகவும் கடினம்.. எந்த ராசிகள் சிக்கிக் கொண்டார்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 09, 2024 06:00 AM IST

Transit of Saturn: சனி பகவான் மார்ச் 18ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் அமைந்துள்ளது.

சனி பகவான்
சனி பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். குறிப்பாக நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் பயணம் மேற்கொள்கிறார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் நிதி ராசியில் சனி பகவான் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்துவித செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 18ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம். வீட்டில் மங்கள காரியங்கள் செய்ய நினைத்தால் தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் சனி பகவான் ஒன்பதாவது வீட்டில் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகமாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகப்படியான செலவுகள் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்கள் உண்டாகும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும் போது மிகவும் யோசிப்பது நல்லது.

மீன ராசி

 

உங்கள் ராசிகள் 12-வது வீட்டில் சனி உதயமாகின்றார். இதனால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மன உளைச்சல் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியம் செய்ய முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel