சூரியன் ஓடிப் பிடித்தார்.. ராகுவோடு கூட்டணி.. மீன ராசிகள் சம்பவம்.. அடி உறுதி..சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூரியன் ஓடிப் பிடித்தார்.. ராகுவோடு கூட்டணி.. மீன ராசிகள் சம்பவம்.. அடி உறுதி..சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்

சூரியன் ஓடிப் பிடித்தார்.. ராகுவோடு கூட்டணி.. மீன ராசிகள் சம்பவம்.. அடி உறுதி..சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 12:51 PM IST

Lord Surya: மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அதேசமயம் புதன் பகவான் ஆட்சி செய்து வருகின்றார். தற்போது ராகு சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சூரிய பகவானின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அதேசமயம் புதன் பகவான் ஆட்சி செய்து வருகின்றார். தற்போது ராகு சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சூரிய பகவானின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சூரிய பகவானின் பயணத்தால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த தருணம் உங்களுக்கு வணிகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது பணவரவு அதிகம். கிடைப்பது சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகம் அற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போகாதிக்க வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக வருமானங்களை இந்த எதிர்பார்க்க வேண்டாம். புதிய திட்டங்களை யாரிடமும் கூறாமல் பாதுகாத்து வைத்துக் கொள்வது நல்லது .

தனுசு ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்க உள்ளது. உங்களுடைய வாழ்க்கையை ஆன்மீகம் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோருடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களில் கடுமையான முடிவுகள் உங்களை பாதிப்படைய வைக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அலுவலக சூழல்களில் பெரும் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner