தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Sign People Who Are Going To Suffer From Lord Mars

Mars: செதுக்கி எடுக்க போகும் செவ்வாய்.. முரட்டு அடி வாங்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 02:51 PM IST

செவ்வாய் பகவானால் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் தங்களது இடத்தை அவ்வப்போது மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலத்தில் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

கிரகங்களின் ராசி மாற்றம் மட்டும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவர்களுடைய மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தனுசு ராசிகள் ஜனவரி 17ஆம் தேதி அன்று உதயமானார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கின்றார்.

செவ்வாய் பகவானின் உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் சிரமத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானின் உதயமானது உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கன்னி ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் தைரியமாக இருந்தால் முன்னேற்றத்தை பெறலாம். முன்னேற்ற வளர்ச்சியில் சில தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் அந்த சிக்கல்களும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மகர ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் 12வது வீட்டில் உதயமாகியுள்ளார். பல்வேறு விதமான தடைகளை நீங்கள் சந்திக்க கூடும். கூடுதலாக அதிகம் உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வசதிகள் குறித்து பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்க தாமதமாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சற்று தாமதமாகும். புதிதாக வீடு மற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் காரிய தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் உதயமாக்கியுள்ளார். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப தேவைகளை கவனிப்பது மிகவும் நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றத்தை அடையலாம். இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது இருக்கக்கூடிய வேலையை விட்டு வெளியேறக் கூடிய சூழ்நிலை உண்டாகும் ஒவ்வொரு அடியும் நீங்கள் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டாலும் செயல்பட தாமதமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.