தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. புதன் முரட்டு அடி கொடுப்பார்.. கஷ்டப்படுவது உறுதி

தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. புதன் முரட்டு அடி கொடுப்பார்.. கஷ்டப்படுவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 11, 2024 10:08 AM IST

Lord Mercury: சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகி உள்ளது. இதனால் சில ராசிகள் பாதகமான சூழ்நிலைகளை அனுபவிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது இந்த புதன் பெயர்ச்சியால் தரித்திர யோகத்தில் சித்திக்கொண்ட ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவான் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது புதன் பகவான் ஒன்று சேர்கின்றார்.

இதனால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகி உள்ளது. இதனால் சில ராசிகள் பாதகமான சூழ்நிலைகளை அனுபவிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது இந்த புதன் பெயர்ச்சியால் தரித்திர யோகத்தில் சித்திக்கொண்ட ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

புதன் பகவானின் இடமாற்றத்தால் தரித்திர யோகத்தில் சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நெருக்கடிகள் ஏற்படும். அதே சமயம் நீச்ச பங்கார யோகத்தின் விளைவு உங்களுக்கு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. இருப்பினும் சில சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் இடமாற்றத்தால் பல்வேறு விதமான மோசமான பலன்களை நீங்கள் பெற போகின்றீர்கள். தடைபட்ட கடந்த காரியங்கள் நிறைவடைய சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளியே செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருப்பது நல்லது. கிடையாது. உயர் அலுவலர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலை தேடுபவர்கள் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. உங்களை தேடி அதிக சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தனுசு ராசி

 

புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு தரித்திர யோகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகக்கூடிய சூழ்நிலை அமையும். வாழ்க்கைத் துணையால் பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படக்கூடும். எதிர்மறையான மாற்றங்களால் உங்களுக்கு பாதகங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. மன இறுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சவால்களை நீங்கள் சமாளிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்