தரித்திர யோகத்தில் சிக்கிய ராசிகள்.. புதன் மீன ராசி புகுதல்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தரித்திர யோகத்தில் சிக்கிய ராசிகள்.. புதன் மீன ராசி புகுதல்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

தரித்திர யோகத்தில் சிக்கிய ராசிகள்.. புதன் மீன ராசி புகுதல்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 07, 2024 12:55 PM IST

Lord Mercury: புதன் பகவான் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் வருகிறார். புதன் பகவானின் இந்த இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

புதன்
புதன்

இது போன்ற போட்டோக்கள்

பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் நன்மைகள் மற்றும் தீமைகள் என அனைத்தும் கலந்து கிடைக்கும். கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து அந்தந்த ராசிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.

அந்த வகையில் இளவரசனாக விளங்கும் புதன் பகவான் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் வருகிறார். புதன் பகவானின் இந்த இடமாற்றத்தால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

 

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு தொடக்கத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தினாலும் அதனுடைய வீரியம் அதிகமாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நெருக்கடிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். தொடர்ந்து உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி ராசி

 

புதன் பகவானால் உங்களுக்கு பல மோசமான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. தினமும் உங்களுக்கு சிக்கல்வில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எந்த சூழ்நிலைகளையும் அலட்சியமாக கையாள்வது நல்லது கிடையாது. சக ஊழியர்கள் உங்களிடம் சிக்கல்களை ஏற்படுத்துவார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இது சரியான தருணம் கிடையாது. அறிவு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தனுசு ராசி

 

உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலைகளை புதன் பகவான் குடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமற்றதாக உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான காரியங்கள் நடப்பதற்கான சூழ்நிலைகள் அத்தனையும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளது. குடும்பம் மற்றும் வாழ்க்கை துணையின் நெருக்கடிகள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நெருக்கடி ஏற்படும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சவால்களை நீங்கள் கையாள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9