தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Sign People Who Are Going To Experience Yoga By Guru Bhagavan

Guru Transit: ரிஷபத்தில் குரு.. மே மாதத்தில் பணமழை தொடக்கம்.. அதிர்ஷ்டம் வருகிறது.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2024 10:45 AM IST

Guru Transit: குருபகவான் ரிஷப ராசியில் இடம் மாறுகின்ற அதே சமயம் மிருகஷீரிடம், ரோகிணி, கார்த்திகை உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்யப் போகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

குருபகவான்
குருபகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஒரு குரு பகவானின் பார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தற்போது வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் இடம் மாறுகின்றார்.

குருபகவான் ரிஷப ராசியில் இடம் மாறுகின்ற அதே சமயம் மிருகஷீரிடம், ரோகிணி, கார்த்திகை உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்யப் போகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாக்குறுதியை காப்பாற்றுவதில் முழுமையாக ஈடுபடுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவான் பயணம் செய்யப்போகின்ற காரணத்தினால் உங்களுக்கு பலன்கள் அதிகம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. விபரீத ராஜயோகம் உங்களுக்கு உருவாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொல்லைகளில் இருந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் வெற்றியாக அமையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

கடக ராசி

 

மே மாதம் குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வாழ்க்கையில் புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். ஒரு வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். குரு பகவானால் உங்கள் ராசியில் பணமழை பொழியப் போகின்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel