தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Sign People Who Are Going To Enjoy Luck Due To The Transit Of Lord Mars

பண மழையோடு வரும் செவ்வாய்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்.. யோகம் வந்துவிட்டது

Mar 24, 2024 05:27 PM IST Suriyakumar Jayabalan
Mar 24, 2024 05:27 PM , IST

  • Mars Transit: செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் குடியேறினார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி மற்றும் செவ்வாய் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை தைரியம், விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் குடியேறினார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி மற்றும் செவ்வாய் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

(2 / 6)

இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளதால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பது உறுதி என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

விருச்சிக ராசி: உங்களுக்கு செவ்வாய் பகவான் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் குடியேறி உள்ள காரணத்தினால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் பணம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி ஆன செய்தி தேடி வரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்