தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Sign People Who Are Going To Be Troubled By Lord Surya

பிரித்து மேயப் போகும் சூரியன்.. தலைகீழாக மாறப்போகுது.. மிரட்டல் அடி உறுதியான ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 11:43 AM IST

Lord Surya: சூரிய பகவான் புதன் மற்றும் ராகு பகவானோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைத்தாலும் சூரிய பகவானின் இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதே சமயம் ராகு பகவானும் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் சூரிய பகவான் புதன் மற்றும் ராகு பகவானோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைத்தாலும் சூரிய பகவானின் இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

 

சூரிய பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை தொடங்கினாலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய திட்டத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படும் காதல் வாழ்க்கையில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு திருப்தியை கொடுக்காது. பல்வேறு விதமான ஆசைகள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். புதிய திட்டங்கள் இருந்தால் அதனை தற்போது தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி

 

உங்கள் ராசிக்கு கலவையான பலன்களை சூரிய பகவான் கொடுக்கப் போகின்றார். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையின் மிகவும் பொறுமையாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோருடன் உங்களுக்கு சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களால் கடுமையாக பாதிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கலாம். சக ஊழியர்களோடு சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel