Lord Mercury: புதனிடம் சிக்கி சிரமப்பட போகும் ராசிகள்
Transit of Mercury: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களில் இளவரசன் பட்டத்தோடு இருக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சனி பகவானின் மகர ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார். ஒரு மாத காலம் இதே ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்கின்றார்.
புதன் பகவான் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த செயலாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்பத்தின் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதிநிலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டு வணிக முறை தற்போது சரியாக இருக்காது. வியாபாரம் மற்றும் தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகின்றார். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9