தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பண பண்டக சாலையில் விழும் 3 ராசிகள்.. ரிஷப உதயத்தில் ஜூன் யோகம்.. நீங்க என்ன ராசி?

குரு பண பண்டக சாலையில் விழும் 3 ராசிகள்.. ரிஷப உதயத்தில் ஜூன் யோகம்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
May 11, 2024 05:58 PM IST

Guru Bhagavan: ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகின்றது.

குரு பண பண்டக சாலையில் விழும் 3 ராசிகள்.. ரிஷப உதயத்தில் ஜூன் யோகம்
குரு பண பண்டக சாலையில் விழும் 3 ராசிகள்.. ரிஷப உதயத்தில் ஜூன் யோகம்

குரு பகவான் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் அஸ்தமனம் மற்றும் உதயம் இது இரண்டும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் மே ஒன்றாம் தேதி ராசி மாற்றம் செய்த இரண்டு நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமானார்.

ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். அதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் நடக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் இலக்கை அடைய எளிமையான வழிமுறைகள் அமையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித்தரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதம் முதல் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட பண வரவு அதிகமாக இருக்கும். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். படித்து முடித்த மாணவர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வணிகம் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் குறையும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel