தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Special Features Of Thai Krithigai Festival

Krithigai Viratham: முருகனின் அருள் கிடைக்கும் தை கிருத்திகை.. விரதம் தரும் வரம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 07:00 AM IST

Krithigai Viratham 2024 : தை கிருத்திகை திருநாளின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

தை கிருத்திகை
தை கிருத்திகை

ட்ரெண்டிங் செய்திகள்

ஒவ்வொரு வீட்டிற்கும் தனி சிறப்பு உள்ளது இந்த கோயில்களில் பல்வேறு விதமான திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முருகப்பெருமானுக்கென மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றுதான் தை கிருத்திகை.

இன்றைய தினம் வெகு விமர்சையாக அனைத்து முருகன் கோயில்களிலும் தை கிருத்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் முருகப்பெருமானின் திருப்பாடல்களை பாடி வழிபாடு செய்தால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கார்த்திகை விரதம்

 

ஒவ்வொரு ஆண்டும் மூன்று கார்த்திகை திருநாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. தை மாதத்தில் வரும் கார்த்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் மகா கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை இந்த மூன்று கார்த்திகைகளிலும் முருக பெருமானுக்கு வெகு விமர்சையாக வழிபாடு செய்யப்பட்டு பூஜை செய்யப்படும்.

தை கிருத்திகை

 

செவ்வாயின் அதிபதியாக முருக பெருமான் விளங்கி வருகிறார். முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் பகவானால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் செவ்வாய் தோஷங்கள் உள்ளிட்ட அனைத்தும் நீங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த திருநாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் விலகும் என கூறப்படுகிறது.

தை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை தினத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டிய வரங்கள் நினைத்தபடி கிடைக்கும் என்பது ஐதீகமாகும். காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு முருக பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு தான் விரத முறைகளை பின்பற்ற வேண்டும்.

கார்த்திகை விரதம்

 

இந்த திருநாளில் விரதம் மேற்கொள்பவர்கள் ஒப்பில்லாத உணவை சாப்பிட வேண்டும், விரதம் இருப்பவர்கள் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுதல் கூடாது, மனதை தூய்மையாக வைத்து முருகனைப் பற்றியே நினைத்து வழிபாடு செய்ய வேண்டும், கந்த சஷ்டி, கந்தபுராணம் உள்ளிட்டவைகளை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது அதிகமாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.