Tamil News  /  Astrology  /  Here We Will See About The Special Features Of Ettukudi Murugan Temple

HT Yatra: நினைப்பதைப் போல் மாறும் சுப்பிரமணி.. பயம் போக்கும் எட்டுக்குடி முருகன்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 10, 2024 06:20 AM IST

எட்டுக்குடி முருகன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

எட்டுக்குடி முருகன் கோயில்
எட்டுக்குடி முருகன் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த தளத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை உள்ளிட்ட அவரோடு மயில் மீது அமர்ந்து காட்சி கொடுக்கின்றார். இந்த மயில் இரண்டு கால்களை அடித்தளமாக கொண்டு மூன்று பேரையும் தாங்கிக் கொண்டு காட்சியளிக்கின்றது. இது மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

தல வரலாறு

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொருள் வைத்த சேரி என்ற கிராமத்தில் ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார். அந்த சிற்பி முருகன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். எப்போதும் சரவணபவ என்று ஆரம்பித்து மந்திரத்தை ஓதிக் கொண்டே இருப்பார். ஒரு முறை முருகப்பெருமானின் சிலையை செய்துள்ளார். அப்போது அங்கு ஆட்சியில் இருந்த பரந்த என்ற சோழ மன்னன் அந்த சிலையின் அழகை பார்த்து மகிழ்ச்சி கொண்டார்.

இந்த சிற்பி இதுபோன்ற அழகான இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக அவரது கட்டை விரலை மன்னன் வெட்டியுள்ளார். பயந்து சென்ற அந்த சிற்பி அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். தனது கைகளில் கட்டைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையாக முயற்சி செய்து இன்னொரு சிலை செய்துள்ளார்.

இந்த சிலையை அந்த பகுதியை ஆண்ட குறுநில மன்னனான முத்தரசன் என்பவர் பார்த்துள்ளார். அந்த சிலையில் இருந்து ஏதோ ஒரு ஒளி வீசி உள்ளது. சிற்பி அந்த சிலையை செய்து முடித்தவுடன் மயிலுக்கு உயிர் வந்துள்ளது உடனே அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்துள்ளது இதனை கண்ட மன்னன் உடனே அதனை எட்டிப் பிடி என உத்தரவிட்டுள்ளார்.

அந்த எட்டு பிடி என்ற வார்த்தை தான் அந்த ஊரின் பெயராக அமைந்தது நாளடைவில் மருவி எட்டுக்குடி என மாறியது. இரண்டு முறை செய்த சிலையை இரண்டு மன்னர்கள் எடுத்துக் கொண்ட காரணத்தினால் மூன்றாவதாக மற்றொரு சிலையை அந்த சிற்பி வடித்துள்ளார்.

மூன்றாவதாக வடித்த சிலையை எண்கண் என்ற தலத்தில் அந்த சிற்பி செய்து வழிபாடு செய்துள்ளார். முதலில் செய்த சிலை சிக்கலில் உள்ள முருகன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சிலை தான் எட்டுக்குடியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சிலைகளுமே உருவத்தில் ஒரே தோற்றத்தை கொண்டிருக்கும்.

தலத்தின் சிறப்பு

 

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமான் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தனது உருவத்தை மாற்றி காட்சி கொடுப்பார் என கூறப்படுகிறது. இவரை குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தையாகவும், இளைஞராக நினைத்து பார்த்தால் இளைஞராகவும், முதியோராக நினைத்து பார்த்தால் முதியவராகவும் காட்சி கொடுப்பார்.

மிகவும் பயந்த சுபாவம் கொண்ட குழந்தைகளை இந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தால் அவர்களின் பயம் நீங்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

குழந்தைகளின் பயம் நீக்கும் தலமாகவும், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் முருகப்பெருமான் அருள் பாலிப்பார் என நம்பிக்கை இருந்து வருகிறது.

இந்த திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு செல்வதற்காக பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.