தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Signs To Be Careful With Lord Rahu

Rahu Palan: ராகு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு ஆபத்து

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 24, 2024 02:53 PM IST

ராகு பகவானிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு பெயர்ச்சி
ராகு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசியில் நுழைந்தார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கின்றார். வரும் 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் கும்ப ராசியில் இடம் மாறுகிறார் இது சனி பகவானின் சொந்த ராசியாகும். ராகு பகவானின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் தற்போது கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலைகளில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசி ராகு பகவானால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் ராகு பகவான் நான்காவது வீட்டில் இருக்கின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும்அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் பல்வேறு விதமான சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் பல்வேறு விதமான சிக்கல்களை ராகு பகவான் ஏற்படுத்துவார். பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கையில் பணம் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel