Mars and Saturn: சனி அம்சத்தில் மாட்டிக் கொண்ட செவ்வாய்.. ரத்தக்கண்ணீர் விடும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது யார்?
Mars and Saturn: ஜூன் ஒன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். ஜூலை 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சனி கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவான் மீது சனியின் மூன்றாம் அம்சம் விழுகின்ற காரணத்தினால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர்.

Mars and Saturn: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் இவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜூன் ஒன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். ஜூலை 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சனி கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவான் மீது சனியின் மூன்றாம் அம்சம் விழுகின்ற காரணத்தினால் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
செவ்வாய் கிரகத்தில் சனி பகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடியது நீங்கள் நிதி இழப்பை சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வருமானத்திற்கான ஆதாரங்கள் குறையக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது. உங்களுக்கு சிக்கல்கள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
கன்னி ராசி
சனிபகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டால் சிரமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் உடமைகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சுமைகளால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய தவறாக இருந்தாலும் உங்களுக்கு பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
துலாம் ராசி
செவ்வாய் பகவான் மீது விழுகின்ற சனி பகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு எதிர்மறையான சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களால் உங்களுக்கு தீங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உடன் பிறந்தவர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்க கூடும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய அதிர்ஷ்டத்தின் ஆதரவு மிகவும் பொறுமையாக கிடைக்கும். எனவே நீங்கள் கவனத்தோடு செயல்படுவது நல்லது. கவலைகளால் உங்களுக்கு கோபம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
