தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: சூரியனோடு கூட்டணி அமைத்த புதன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. பார்க்கலாம் வாங்க

Money Luck: சூரியனோடு கூட்டணி அமைத்த புதன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. பார்க்கலாம் வாங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2024 09:54 AM IST

Sun and Mercury: புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இந்நிலையில் புதன் மற்றும் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது.

சூரியனோடு கூட்டணி அமைத்த புதன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. பார்க்கலாம் வாங்க
சூரியனோடு கூட்டணி அமைத்த புதன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. பார்க்கலாம் வாங்க

கொட்டிக் கொடுக்கும் இடத்தில் சூரியன்.. வாரி வழங்கும் இடத்தில் புதன்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

சூரியனோடு கூட்டணி அமைத்த புதன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு பார்க்கலாம் வாங்க

சூரியன், புதன், சூரிய பகவான், புதன் பகவான், ராசிகள், ராசி, மிதுன ராசி

சூரியன் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

சூரியன் புதன் சேர்ந்து ராஜயோகத்தை கொடுக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Sun and Mercury: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுவார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர். புதன் பகவான் இவர் கல்வி, அறிவு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும். புதன் பகவான் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு சூரிய பகவான் ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இந்நிலையில் புதன் மற்றும் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நிறைவான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். எதிரிடியாக முன்னேற்றம் இருக்கும். 

செல்வத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நம்பிக்கை கூறிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை நகல் உள்ளது. ஜூன் மாதம் முழுவதும் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட கால நிதி சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

புதன் பகவானால் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைகளில் கவர்ச்சி அதிகரிக்கும். சூரியனின் ஆதிக்கத்தால் மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். தனித்துவமான உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேதி வரும். முன்னேற்ற வாழ்க்கைக்கான சூழ்நிலைகள் அமையும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

சூரியன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிதின் நிலைமையில் பலம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி சிக்கல்களை நீங்கள் நீண்ட காலம் சந்தித்திருந்தால் அது விரைவில் குறைந்துவிடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரித்து விடும். 

விடாமுயற்சியால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வருவாய்க்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையும் மேம்பட்ட சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செழிப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9