தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Rasis With Raja Yoga By Lord Mercury

Lord Mercury: புதன் மாறுகிறார்.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. குபேர யோகம் வந்துவிட்டது.. தலைவிதி மாறப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 04:53 PM IST

Lord Mercury: கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

புதன்
புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் அடைந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

சிம்ம ராசி

 

புதனின் செயலால் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் கிடைக்கப் போகின்றது. பெரிய ஆதாயங்கள் உங்களை தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உங்களோடு உடன் பணி செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்கையில் முன்னேற்றம் உண்டாகும். சிக்கிக்கிடந்த பணங்கள் உங்களை தேடிவரும்.

தனுசு ராசி

 

புதன் வக்கிரப் பெயர்ச்சியால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய பணி அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் நேரம் வந்து விட்டது.

கும்ப ராசி

 

புதன் பகவானின் வக்ர இடமாற்றமானது உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முன்னேற்றப்படுவதற்கான காலம் கூடி வருகின்றது. பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தடைபட்டுக் கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel