Lord Venus: பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. சுக்கிரன் வந்து விட்டார்.. ராஜ யோகத்தில் அமரும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. சுக்கிரன் வந்து விட்டார்.. ராஜ யோகத்தில் அமரும் ராசிகள்

Lord Venus: பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. சுக்கிரன் வந்து விட்டார்.. ராஜ யோகத்தில் அமரும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 27, 2024 10:03 AM IST

Lord Venus: சுக்கிர பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சுக்கிரனின் உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. சுக்கிரன் வந்து விட்டார்.. ராஜ யோகத்தில் அமரும் ராசிகள்
பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. சுக்கிரன் வந்து விட்டார்.. ராஜ யோகத்தில் அமரும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிர பகவானின் உதயம்  அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சுக்கிரனின் உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்காக முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்வார்கள்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்திக்கும் திறனால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நல்ல நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதிநிலைமை முன்பு இருந்ததைவிட சிறப்பாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி ஆதாயம் அதிகமாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சுத் திறமையால் பல்வேறு விதமான வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9