சனி ஆட்டம் இனிதான் ஆரம்பம்.. மகரம், ரிஷபம், கன்னி ராசிகள் தலையெழுத்து மாறப்போகுது.. இனிமேல் பணமழை தான்
Lord Saturn: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து நேரடியான பயணத்தை தொடங்கினார். சனி பகவானின் நேரடி பயணத்தால் மூன்று ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Saturn: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து நேரடியான பயணத்தை தொடங்கினார். சனி பகவானின் நேரடி பயணத்தால் மூன்று ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
சனி பகவானின் நேரடி பயணத்தில் உங்களுக்கு சரிசமமான பலன்கள் கிடைக்கக்கூடும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளியே சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும்.
கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ரிஷப ராசி
சனிபகவானின் நேரடி பயணத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நீண்ட காலமாக நினைத்து இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கன்னி ராசி
சனி பகவானின் நேரடி பயணத்தால் உங்களுக்கு தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் எந்த குறையும். இருக்காது செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியை மற்றும் அமைதி நிறைந்திருக்கும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கூடுதல் பொறுப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால் அதற்கு சரியான காலமாக இது அமையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.